ஒரு குறிப்பிட்ட வருசத்தில், ஒருவருக்கு நடக்கக்கூடிய சம்பவங்களை அறிய முயற்சித்த முந்தைய சோதிட மேதைகள் கண்டுபிடித்ததுதான், வருசப்பிரவேச ஜாதகம். இதை ஆங்கிலத்தில் Solar Return Chart என்று அழைக்கின்றார்கள். ஒருவர் பிறந்த போது, சூரியன் எந்த ராசியில், எத்தனையாவது பாகை, கலை, விகலையில் இருக்கின்றதோ அதே இராசி, பாகை, கலை, விகலைகளை ஒவ்வொரு வருடமும் சேரும்போது பிறப்பதே ஒவ்வொருவரின் புத்தாண்டு தினமாகும். அப்போதைய கிரக நிலைகளையும், லக்னத்தையும் கணித்து அந்த ஜாதகத்தை ஜாதகரின் பிறந்த ஜாதகத்தோடு சேர்த்து ஒப்பிட்டுப் பார்த்து முடிவுக்கு வரவேண்டியது சோதிடரின் கடமையாகும். இந்த வாரம் ஒரு வருசப் பிரவேச ஜாதகத்தைக் கணித்துப் பார்ப்போம்.

30.05.1926 ஞாயிற்றுக்கிழமை பகல் 10.15க்குப் பிறந்த ஒருவரின் ஜாதகம் இவ்வாறு அமைந்திருக்கின்றது.

sample horoscope

sample horosope

sample horoscope

sample horosope

எளிய குடும்பத்தில் பிறந்த இவர் தனது முயற்சியால் செல்வந்தரானார். வர்க்கோத்தம சுக்கிரன், சூரியன் ஆகிய இரண்டு கிரகங்களும் இவரது பொருளாதாரத்தை மேம்படுத்தின.  

இவரது 62வது வயது 31.05.1987 ஞாயிறு காலை மணி 1.17க்கு பிறக்கின்றது. அந்த வருசப்பிரவேச ஜாதகம் இவ்வாறு அமைகின்றது.

sample horoscope

sample horosope

sample horoscope

sample horosope

இந்த ஜாதகர் தனது 62 வயது முடிவதற்கு முன்னமேயே காலமானார். அவரது மரணத்துக்கான குறிப்புக்கள் வருசப்ரவேச ஜாதகத்தில் தெரிகின்றனவா எனப் பார்ப்போம். 

  • ஜன்ம லக்னமான கடகத்துக்கு எட்டாமிடமான கும்பலக்னம் உதயமாகின்றது.
  • கும்பலக்னத்தின் நவாம்சம் மிதுனராசியில் உள்ளது. இம்மிதுனத்தில் ஜன்மலக்னத்துக்கு அட்டமாதிபதியான சனி  ஜன்ம ஜாதகத்தில் உள்ளது.
  • கும்ப லக்னத்தின் கடைசி பாகம் உதயமாவதால், எட்டாமிடம் கன்னியில்  விழாமல், துலாத்தின் 1 பாகை 44 கலையில் உள்ளது. எட்டாம்பாவாதிபதியும் சுக்கிரன். எட்டாம்பாவத்தின் நவாம்சபதியும் சுக்கிரன். இச்சுக்கிரன் ஜன்மலக்னமான கடகத்துக்குப் பத்தாமிடத்தில் வருசப்ரவேச ஜாதகத்தில் இருப்பதால் இந்த வருடத்தில் மரணம் நேரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
  • எப்படி வருசப்ரவேச லக்னத்தின் அம்சம், ஜன்மகால அட்டமாதிபதி உள்ள மிதுன நவாம்சத்தைச் சேர்கின்றதோ அதேபோல வருசப்ரவேச ஜாதகத்தின் எட்டாம் பாவ அம்சம் துலாத்தைச் சேர்கின்றது. அங்கே ஜன்ம லக்னாதிபதியான சந்திரன் ஜன்ம ஜாதகத்தில் உள்ளது.
  • சனி, ஜன்மகால லக்னத்துக்கு அட்டமாதிபதியாய் வந்து, வருசப்ரவேச  ஜாதகத்தில் வருசப்ரவேச லக்னாதிபதியுடன் சம்பந்தப்பட்டால், அந்த வருடத்தில் மரணம் நேரும் வாய்ப்பு உண்டு. இங்கே, சனி ஜன்மகால அட்டமாதிபதியாய் வந்து, வருசப்ரவேச கால லக்னாதிபதியாகவும் ஆகிப் பத்தாமிடத்தில் இருப்பதால் மரணம் நேரும் வாய்ப்பு உண்டு. இந்த யோகம் மிதுன, கடக லக்ன ஜாதகர்களுக்கு மட்டுமே நேரும். (தாஜிக நீலகண்டீ என்ற நூலின் அட்டம பாவ அத்தியாயத்தின் 23வது சுலோகம்).
  • புண்ய ஸஹம் என்ற புள்ளி மகரராசியில் 22 பாகை 09 கலையில் உள்ளது. அட்டமாதிபதி சுக்கிரன் இப்புள்ளிக்குக் கேந்திர பார்வையில் உள்ளது.
  • கிரகங்களின் முன் நகர்வு (The Progression of Planets) என்ற கட்டுரையில் நாம் குறிப்பிட்டதைப் போல முன்நகர்ந்த சூரியன் (62வது நாளான 30.07.1926ல்) கடகராசியின் 13 பாகை 25 கலையைச் சேர்கின்றது. பொதுவாக முன்நகர்ந்த சூரியன் 1 ,4, 7, 10 ஆகிய இடங்களில் வரும் போது அந்த வருடம் முக்கியமான ஆண்டாக மாறுகின்றது.
  • 62வது நாளில் சந்திரன் மீன ராசியில் 22 பாகை 31 கலையில் உள்ளது. இது ஜன்ம காலச் சந்திரனுக்கு நான்காமிடத்தில் வருகின்றது. ஜன்ம சந்திரனுக்குச் சரியான 1, 4, 7, 10-ல் முன்நகர்ந்த சந்திரன் (progressed moon) வரும் ஆண்டுகளும் பொதுவாக நல்ல பலன்களைத் தராது. 
  • எனவே குறிப்பிட்ட இந்த வருடத்தில் இவரது  மரணம் தவிர்க்க இயலாது என்பது நிச்சயம். இவர் 10.04.88ல் ஓரு தகராறில் கொலை  செய்யப்பட்டார். 10.04.88ல் வருசப்ரவேச தசாமுறைப்படி இவருக்குச் சனி தசை நடந்தது. ஜன்ம லக்னத்துக்கு எட்டில் செவ்வாய் இருப்பதும், அந்தச் செவ்வாய் இருக்கும் கும்பராசியின் 26 பாகை 07 கலைக்கு வெகு அருகே வருசப்ரவேச லக்னமான கும்பத்தின் 27 பாகை 38 கலை அமைவதும், 10.04.88ல் செவ்வாய் மகர ராசியின் 8 பாகை 40 கலையில் இருந்து ஜன்ம லக்னத்தைப் பார்ப்பதும், இவரது கொடுமையான மரணத்துக்குக் காரணமாகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக 10.04.88ல் இச்சம்பவம் நடந்த போது சிம்மலக்னத்தில் 27 பாகை 4 கலை உதயமாவதும் இதற்கு நேர் எதிரில் கும்பத்தில் இந்த ஜாதகரின் ஜன்ம செவ்வாய் இடம் பெற்றிருப்பதும் விதியின் கைகளில் நாம் பொம்மைகள்தாம் என்பதை வலியுறுத்திச் சொல்கின்றன.

 

This Week’s Quote:

Common sense is not so common.

-  Voltaire

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.